200 பேருக்கு தொற்று உறுதியாகவில்லை!

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகியோரில் இதுவரை 200 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று இதுவரை குறித்த கைதி உட்பட நால்வருக்கு தொற்று உறுதியானது.

இதில் ஒருவர் ரியாத்தில் இருந்தும், இன்னொருவர் எத்தியோப்பியாவில் இருந்தும் நாடு திரும்பியவர்களாவர். அத்துடன் கடற்படை வீரர் ஒருவரும் அடங்குகிறார்.