அரிசி ஏற்றி சென்ற லொறி விபத்து; இருவர் காயம்!

ஏறாவூர் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று (06) காலை விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த லொறியில் இருந்த 400 அரிசி மூடைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.