துப்பாக்கி மற்றும் குண்டுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில்  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை  (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா

கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய மாகொவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

சந்தேகநபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மாலம்பே

மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அரங்கல பிரதேசத்தில் மாலம்பே பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய மாலம்பே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com