மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் இன்று (04) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்தில் மோதியதால் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்பாேது மாேட்டார் சைக்கிளில் பயணித்த இன்னாெருபவர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.