
பிபிலையில் இடம்பெற்ற விபத்தில் 10 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிபிலை, தொடங்கொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (09) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபில கனுல்வெல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர் குழுவொன்று விளையாட்டு நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வெல்லஸ்ஸ தேசிய பாடசாலைக்கு இன்று காலை சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.