சூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது

சூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் தொடர்பில் வெள்ளைவத்தை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள ஒருவருக்கு வழங்குவதற்காக போதைப் பொருட்களைக் கொண்டு சென்ற பெண் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஹெரோயின் 5 கிராம் மற்றும் 3 கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருந்து பொருள் பக்கெற் (பெட்டி) ஒன்றில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.