ஜோசப் ஸ்டாலின் கைதைக் கண்டித்து யாழில் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், ரணில் அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் யாழ்ப்பாணப் பேருந்து மத்திய நிலையத்தின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com