கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு காலக்கெடு

“கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com