கொரோனாவால் லண்டனில் யாழ் மயிலிட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞன் பலி

புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி முன்னாள் மாணவன் அழகரத்தினம் ஜீவிதன் என்ற தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

lockdown முன்பு ஒரு வாரம் முதலே வேலையில் இருந்து leave எடுத்தவன் . 1st April கதைத்த போது கூட பம்பலாக கதைத்தவன் இப்பவரை நம்ப முடியவில்லை…

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com