இரு துப்பாக்கிகள் மீட்பு!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் இன்று (01) மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள காணியில் துப்பாக்கி இருந்ததை அடுத்து அதனை கண்ட பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் துருப்பிடித்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டது.