பொலிஸார் நால்வரிடம் இருந்து 31 மில்லியன் ரூபாய் கைப்பற்றல்!

போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வரிடம் இருந்து இதுவரை 31.45 மில்லியன் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதத்துடன் புதிதாக மூன்று வாகனங்களும் ரி-56 மகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பொலிஸார் நால்வர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 25 பேர் கொண்ட மூன்று குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, ஊழலில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.