யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனிடமிருந்து 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.