அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களும் வாக்களிக்க முடியும்!

நாட்டில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களுக்கு வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட தற்காலிய அனுமதிப்பதிரம் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்கு வரும் வாக்காளர்கள் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்கு நீலம் அல்லது கருப்பு பேனாக்கல் சிறந்தது என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.