யாழில் 4 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் 4 கிராம் 680 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியகோவில் வீதிப் பகுதியில் வைத்து மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.