வவுனியாவில் அதிகரிக்கும் வாள் வெட்டுக்கள்: நேற்று ஐவர் காயம்

வவுனியாவில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மகாறம்பைக்குளம்,பூந்தோட்டம், சிறிநகர் போன்ற பகுதிகளில் நேற்றயதினம் மாலை குறித்த அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கடந்த சிலநாட்களாக வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் இளைஞர் குழுக்களிற்கிடையிலான அடிதடி சம்பவங்கள் அதிகரித்துவருவதுடன் அவற்றில் அதிகமான சம்பவங்கள் மதுபோதையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

குறிப்பாக வீதிகளில் குழுக்களாக ஒன்று கூடும் இளைஞர்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுவருவதுடன், இதனால் வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள், முதியவர்களும் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்விடயங்கள் தொடர்பாக பொலிசார் கூடிய கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.