தந்தையின் காரில் தவறுதலாக 3 மணித்தியாலங்கள் விடப்பட்ட குழந்தை பரிதாபகரமாக மூச்சுத்திணறி மரணம்

தந்தையின் காரில் தவறுதலாக 3 மணித்தியாலங்கள்  விடப்பட்ட 4 மாத ஆண் குழந்தையொன்று  பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இஸ்ரேலில் எலாட் நகரில் இன்று வியாழக்கிழமை (30.06.2022)  இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் குறிப்பிட்ட பாலகனின்  தந்தை மதக் கல்வி நிறுவனமொன்றுக்கு  காரில் சென்றுள்ளார்.

இதன்போது அவர்  தனது  பாலகனான தனது மகன் காரில்  இருப்பதை  மறந்து விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நண்பகல் அளவில் அவர் தனது காரை நண்பன் ஒருவருக்கு  பயன்படுத்தக் கொடுத்த போது, அந்த  நண்பன் காரில்  குறிப்பிட்ட குழந்தை உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குறித்த குழந்தை பின்னர் உயிரிழந்துள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com