ஐவரை சுட்டுக் கொன்ற குற்றம் அறுவருக்கு மரண தண்டனை ! – 22 வருட வழக்கு விசாரணையின் பின் தீர்ப்பு

 ஐவரை சுட்டுப் படுகொலை செய்த குற்றத்தில்,  6 பேறுக்கு மரண தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று ( 30) தீர்ப்பளித்துள்ளது. மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னகோன்  இதற்கான தீர்ப்பை  அறிவித்தார்.

Articles Tagged Under: மரண தண்டனை | Virakesari.lk

கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி,  கொலைக் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கொன்றுக்கு சென்றுகொண்டிருந்த 5 பேர்,  மாத்தறை – தெவினுவர விகாரைக்கு அருகே சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர்.

 இந்த சம்பவம் தொடர்பில் 15 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் மாத்தறை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

 இந் நிலையிலேயே, சம்பவம் நடந்து சுமார் 22 வருடங்களில் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 குற்றம் சுமத்தப்பட்ட 15 பேரில், வழக்கு விசாரணையிடையே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை நீதிமன்றம் நிரபாராதிகள் என அறிவித்து இன்று விடுவித்தது. இந் நிலையிலேயே குற்றவாளிகளாக காணப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com