அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அனைத்து அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com