விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை


விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

No description available.
No description available.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலை, எடை, அளவு, உற்பத்தி திகதி, காலவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உட்பட சகல விபரங்களும் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, இணையத்தளம் மூலம் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com