ஆப்கானிஸ்தானுக்கு 2 ஆம் கட்ட உதவிகளை வழங்கியது இந்தியா

ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா இரண்டாவது கட்ட நிவாரண உதவியை வழங்கியது.

1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுக்கொண்ட  பேரழிவுகரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காபூலை அடைந்த நிவாரணத் தொகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொருட்கள் காபூலில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் ஆப்கானிஸ்தான்  செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவியை தொடர அதன் தொழில்நுட்பக் குழுவைத் திருப்பி அனுப்பும் இந்தியாவின் முடிவை தலிபான் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com