பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய  ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

லண்டன் போன்ற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,சுரங்க ரயில் நிலையங்கள் வழக்கமாக மக்கள் கடல் போல் காட்சியளிக்கும். 

40,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், ரயில் பயணிகளிடையே கடும் குழப்பம் நீடிக்கிறது.

பஸ் தரிப்பிடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாடகைக் கார்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது.

ரயில்வே சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com