தனிப்பட்ட ரீதியில் எரிபொருள் வழங்கிய பவுசர் சிக்கியது!

நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள்  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில், கொழும்பு பம்பலபிட்டியில் வைத்தியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் எரிபொருள் பவுசரில் இருந்து கேன்களில் எரிபொருளை பெற்று தனது காரில் ஏற்றியுள்ளார்.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார்கள்.

காணொளி இன்று காலை முதல் சமூக வலைத்தளத்தல் உலாவி வந்தது. இதற்கு பலர் கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு  வந்தார்கள்.

இந்நிலையில், வைத்தியருக்கு எரிபொருளை வழங்கிய பவுசர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com