பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகளுக்கு இன்று விடுதலை

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் 173 கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய வெலிக்கடை, குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அனுராதபுரம், களுத்தறை ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அத்தோடு, கொழும்பு மகசின், கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, யாழ்ப்பாணம், திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கும் இன்று பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 34 வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com