யாழ். அல்லாரையில் வர்த்தகர் மீது சரமாரியான வாள்வெட்டு

யாழ்.கொடிகாமம் அல்லாரை பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்கான வர்த்தகர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குஞ்சுராசா அஜந்தன் வயது 40 என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கடையில் வேலையிலீடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கூப்பிட்டபோது வர்த்தகர் வெளியே வந்தவுடன்
வர்த்தகர் மீது சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த வர்த்தகர் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்குவந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.