காத்தான்குடியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் பிற்பகுதில் நிலத்தை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்றை இன்று சனிக்கிழமை  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த ஹோட்டலின் பகுதியின் நிலப்பகுதியில் சம்பவதினமான இன்று சனிக்கிழமை காலை நிலத்தை தோண்டி கழிவு நீரை விடுவதற்காக தாங்கி ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று கைகுண்டை கைப்பற்றியதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்..

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com