
யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவிலடியில் நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் யாசகம் பெற்று வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொரோனா அச்சத்தால் முழு நாடும் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், யாசகர்கள் உணவை பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் தொடர்ந்து நீண்டநாட்களாக முடக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் நகரில் யாசகம் பெற்று வந்த குறித்த நபர் உண்ண உணவின்றி உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.