வாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி!

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் இரத்தினபுரி நோக்கி பயணித்து கொண்டிருந்த ஜீப் ரக வண்டி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த சிறுமி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி ஒருவராவார் இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com