மின்சாரம் தாக்கி வயதான கணவனும் மனைவியும் பரிதாபமாக பலி

தொடங்கொட பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கியதில், கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்கல, நேஹின்ன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த 68 வயதுடைய கணவனும், அவருடைய 63 வயதுடைய மனைவியும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தொடங்கொட பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.