முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13வது வருட நினைவேந்தல் வாகரையில்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டின் கீழ் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகரை மாணிக்கபுரம் கடற்கரை மண்ணில் நினைவு கூரப்பட்டது .

இதன்போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையிலான முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வாழைச்சேனை பிரதேச சசபை உறுப்பினர் கு.குணசேகரம், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமாரராசா மற்றும் வாகரை பிரதேச இணைப்பாளர் எஸ்.சதிஸ் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com