இலங்கையில் வானிலிருந்து விழுந்த மர்ம கல்!

கண்டியில் வானில் இருந்து விழுந்த மர்ம கல் ஒன்று கண்பிடிக்கப்பட்டுள்ளது.

பேராதனை, ஜேம்ஸ் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த கல் தொடர்பில், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வெள்ளை நிறத்திலான இந்தக் கல் நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை வானில் இருந்து விழுந்திக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பின்னர் இதேபோன்ற வேறு கற்கள் அந்த பிரதேசத்தின் சுறு்றுவட்ட பகுதிகளில் பரிசோதிக்க பிரதேச மக்கள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவ்வாறான ஒன்றையும் கண்டுபிடிக்க முடியில்லை எனவும் கூறப்படுகின்றது.

1605 கிராம் நிறையுடைய இந்த கல் 16 சென்றிமீற்றர் நீளமும் 7 சென்றி மீற்றர் உயரமும் கொண்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட போராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது விண்கல் என சந்தேகிக்க கூடிய பொருளாகவே உள்ளது.

இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இவ்வாறான வேறு பகுதிகள் இல்லாமையினால் இது ஆற்றில் இருந்து அடித்து வந்த கல்லாக இருக்கலாம் என நினைக்கலாம் என்றும், எனினும் இது இயற்கைக்கு மாறாக உள்ளதாகவும் விண்கல் பொழிவில் விழுந்தமைக்கான தன்மை இதில் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெள்ளைக் கல்லில் சற்று எரிந்த தன்மை காணப்படுகின்றது. இதனை சோதனையிட்டு விண்கல்லா என்பதனை உறுதி செய்யப்படும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.