பெற்ற தாயை தடியால் அடித்தே கொலை செய்த மகன்!

மஹியங்கனை – தபான பிரதேசத்தில் நபர் ஒருவர் தன் தாயாரை தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 62 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந் தாயின் சகோதரர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில், சகோதரர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.