
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று நான்காவது நாளாக அம்பாறை வீரமுனையில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 12, 1990 அன்று வீரமுனையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் முஸ்லீம்களால் 155 தமிழர்கள் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.







