ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சகல மாவட்டங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. . குறித்த பகுதிகளில் அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி ஊரங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com