விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது

கட்டுநாயக்க விமானப்படை முகாமில் கடமையாற்றி வரும் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் விற்பனையை கையாண்டு வந்த கைதி மற்றும் அவரது மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட கைதியின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ கிராம் கஞ்சாவையும் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.