
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று மூன்றாவது நாளாக மட்டக்களப்பு மயிலந்தனையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் குணசேகர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
ஓகஸ்ட் 09, 1992 அன்று மயிலந்தனைக் கிராமத்திற்குள் புகுந்த சிறிலங்கா இராணுவத்தினர் 39 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.






