அக்கரைப்பற்றில் பாரிய மரம் வீழ்ந்ததில் 3 பஸ்கள் சேதம்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று மாலை பலத்த காற்றும் மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலையின் வீதி ஓரத்தில் இருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது மரம் சரிந்து விழும் போது அங்கு கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள் சிதறியடித்து வெளியேறியுதால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பஸ்களும் சேதமடைந்தன.

வாகனங்கள் திருத்தும் ‘ஜாட்’டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வானம் திருத்தும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் கட்டடமும் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதேவேளை அக்கரைப்பற்று சாலையில் வாகன தரிப்பிட வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.