
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நல்லூர் தியாகதீபம் திலீபன் அவர்களுடைய நினைவுத்தூபி அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வானது
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகளால் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





