சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம் ; மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியிடம் வாக்குமூலம்

மக்களின்  அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில்,  கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்து மீறித் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில்  சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சி.ஐ.டி.யின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சர்கள் இதற்காக நியமிக்கப்ப்ட்டுள்ளனர். 

அவர்களின் வழி நடத்தலில் 6 சி.ஐ.டி. குழுக்கள் இவ்விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர்  இன்று(11) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரதான ஏற்பாட்டாளர் ஆகியோரும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com