பிரித்தானியா பூங்கா ஒன்றில் தீவிரவாத தாக்குதல்! கத்திக் குத்துக்கு இலக்காகி மூவர் பலி

பிரித்தானியாவில் கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டம் நடந்த பூங்காவில் வன்முறை வெடித்த நிலையில் மூவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெர்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Forbury Gardens பகுதியிலேயே குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வன்முறையில் பலர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக பொலிசாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கும் இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை எனவும், ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே Forbury Gardens பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.