கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை எடுக்கவுள்ளாரா சசிகலா ரவிராஜ்

நேற்று முன்தினம் சாவகச்சேரியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் நடாத்தப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் சுமந்திரனின் வலது கையும் வடக்கு மாகாண சபை இயங்குவதை தடுப்பதில் முன்னின்றவருமான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தனால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

பொது மேடையில் சபை நாகரீகம் தெரியாத சட்டத்தரணி சயந்தனின் செயலை தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்த சசிகலா ‘ சயந்தன் விரும்பும் நபருக்காக என்னால் வேலை செய்ய முடியாது என்பதையும் தனது பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தென்மராட்சிப் பகுதியில் சயந்தனுக்கு ஆதரவுத் தளமே இல்லாதபோது குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தை தனது ஆதரவுத் தளத்தை அதிகரிக்கும் நோக்கோடு தனது வீட்டில் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான பரஞ்சோதியும் கலந்து கொண்டதோடு சசிகலா ரவிராஜின் முகப்புத்தக பதிவின் பின்னூட்டத்தில் வருத்தம் தெரிவிக்கும் தனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். (பின்னிணைப்பு)

சசிகலா ரவிராஜின் பதிவு

எனக்கு நேற்று நேர்ந்த எதிர்பாராத சம்பவம்!! அன்பான மக்களே உங்களிடம் சில நிமிடங்கள்….
நேற்றைய தினம் சாவகச்சேரி தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது.
பொது மேடையில் சபை நடைமுறை தெரியாமல் நடந்து கொண்ட சயந்தன்
என்னை பேசுவதற்கு அழைக்கும் போது கே.சயந்தன் நடந்து கொண்ட விதம் மனதிற்கு வேதனையைத் தருகிறது.
சபை நாகரீகம் தெரியாது நடந்து கொள்வது மிக வேதனையானது.
அவர் கூறும் நபரை ஆதரித்து என்னால் வேலை செய்ய முடியாது
என்னுடைய கணவன் மிக துணிச்சலானவர் மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர் இப்படியான ஒருவரின் மனைவியான நானும் அவரின் பாதையில் பயணிக்க சயந்தன் பல முட்டக் கட்டைகளை போடுவதுடன் எனக்கும் என் தொகுதி மக்களிற்கும் எதிரான நபரை என்னால் ஆதரிக்க முடியாது.
எமது கட்சித் தலைமை மதிப்புக்குரிய மாவை ஐயாவின் வழிநடத்தலில் தொடர்ந்து பயணிக்க என்னால் முடியும்.
விடுதலைப் போராட்டத்திற்கு எதிர் நிலைப்பாட்டுடன் இருப்பவர்களுடன் என்னால் பயணிக்க முடியாது.

பரஞ்சோதியின் பின்னூட்ட கருத்து
Ariyakuddy Paranchothy
நானும் அக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக கலந்துகொண்டிருந்தேன். சசிகலாவை அறிமுகப்படுத்தும்போது கூட்டத்தலைவரினால் பேசப்பட்ட விடயங்கள் நாகரிகமற்றவை. இப்படியான நிலையில் சிலர் கூட்டத்தைவிட்டே வெளியேறியிருப்பர். சபை நாகரிகம் கருதி தொடர்ந்து அங்கே இருந்த்து அவரது பெருந்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு

குறித்த பதிவிற்கு கருத்திட்டவர்களில் சில கருத்துக்கள்

Ulaka Maka Saanakkiyan
திருமதி சசிகலா:- அம்மா, மாமனிதர் ரவிராஜ்ஜில் அளப்ப்ரிய பற்றும் பாசமும் உடைவர் நாம்.
அவரது பணிக்கு நேரெதிரான பணியில் ஈடுபட்டு வருகிற சுமந்திரன் அவர்கள், உங்களை வெறுமனே மாமனிதரின் ஆதரவு வாக்குகளை எடுக்கும் ஒரு கருவியாகவே பயன்படுத்திவிட்டு, தூக்கி எறிவார்.
அரசியலில் அவரது நடவடிக்கைகள் அப்படியானவையே.
வெளிப்படையாக சொல்வதானால், உங்களுக்கான வெற்றிபாய்ப்பு மிகவும் குறைவானதே அம்மா. நீங்கள், மாமனிதரின் மனைவியாக தோல்வியடைவதை நாம் விரும்பவில்லை.
ஆனால் சுமந்துரன் , உங்களின் தோல்வியை மாமனிதரின் கொள்கைக்கான தோல்வியாகவே பிரசாரப்படுத்துவார்.
தயவு செய்து அதை புரிந்து கொண்டு, இந்த தேர்தலில் இருந்து விலகி நீங்கள் நேர்வழிக்கு செல்லுங்கள்.
மக்கள் உங்களை மதிப்பார்கள்.
இதே போல 2015 தேர்தலில் மதினி நெல்சனையும் இவர் கிள்ளுக்கீரையாக பாவித்து அவமதித்து தூக்கி எறிந்தார். வேண்டுமானால் அவரிடம் கேட்டுப்பார்க்கலாம்.
அனந்தி சசிதரனை அவமதித்தார்.
இந்த நிலை ஒரு மாம்னிதரின் மனைவியாக உங்களுக்கு வர கூடாது.
தயவு செய்து விலகுங்கள் அம்மா

Kumanan Murugesan
2015 தேர்தலின் போது பருத்தித்துறையில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு மதனி அவர்களுக்கு அழைப்பு விடாமல் இறுதி நேரத்தில் கூப்பிட்டு அவமானபடுத்தியவர்கள் நான் இதில் நேரடியாக எதிர்த்தேன் இன்னும் பல உண்டு

Kunalan Karunagaran
இழந்துபோன செல்வாக்கினை மீள கட்டியெழுப்பவே தனது வீட்டில் இந்த கலந்துரையாடலினை சயந்தன் ஏற்பாடு செய்திருந்தார் . இது தவறான விடயம் . அவரது வீட்டில் நடாத்துவதற்கு அனுமதித்தது பாரிய தவறு , இதனாலேயே சரவணபவன் அங்கு செல்லவில்லை .