சிறிலங்கா தேர்தல்: முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்தவர்களை வெளிப்படுத்திய நிறுவனம்

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது விளம்பரங்களுக்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளனர். என்ற தகவலை நிறுவனம் முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளது.

ஜீன் 16ம் திகதி வரையான தகவலின் படி 15288 அமொிக்க டொலர் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருக்கின்றது. இந்த தகவல் வெளியிடப்பட்டமை தேர்தலின் போது விளம்பரத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான பேஸ்புக்கின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இவர்களில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கயன் இராமநாதன் 2 இடத்தில் இருக்கிறார். சென்றமுறை மைத்திரி வழங்கியது போன்று இம்முறை தேசிப்பட்டியல் கிடைக்காது என்பதை நன்கறிந்தே அங்கயன் பணத்தை தண்ணியாக இறைத்தேனும் வெல்ல வேண்டுமென கங்கனம் கட்டி நிற்பது தெளிவாகிறது.

இதுவரை செலவிட்ட முதல் 10 பேர் இவர்கள்