தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறையில் பணியாற்றிய நெல்லியடி இளைஞன்

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேரந்த 21 கமல்ராஜ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

தற்கொலைக்கான காரணம் தெரியாவராத நிலையில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.