மாடுகளை மோதித்தள்ளிய புகையிரதம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை சென்ற ரயில் இரு பசு மாடுகளினை மோதி தள்ளியது. நாவலர் வீதி பகுதியில் நடந்த சம்பவத்தில் ஒரு பசுமாடு அங்கேயே உயிரிழந்தது. காயமடைந்து நடக்க முடியாமல் நிலையிலிருந்த இன்னும் ஒரு பசுமாட்டை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இணைந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். மாநகரசபை கால்நடை வைத்தியர் நடந்த இடத்திற்கு வருகை தந்து உடனடியாக பசுமாட்டுக்கு உரிய சிகிச்சை அளித்தார்.