யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘மானுடம் 2022’ என்னும் பெயரிலான சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளது.

‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்னும் கருப்பொருளில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.

இது தொடர்பாக, ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாட்டின் அமைப்புக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையைத் தங்கள் செய்திப்பத்திரிகையில் / தொலைக்காட்சிச் சேவையில் / வானொலி ஒலிபரப்பில் / செய்தி இணையத்தளத்தில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com