ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரச தாதியர் சங்கத்திற்கு மார்ச் 11ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை!

அரச தாதியர் சங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதற்கு தொடர்ந்தும் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

அரச தாதியர் சங்கம் மேற்கொண்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை உடனடியாக இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர், வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, அரச தாதியர் சங்கம் மேற்கொண்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 10ஆம் திகதி நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com