
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 13 அடி பரப்பக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் – அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 6 அடி சமூக விலகல் விதிகளை விட இரண்டு மடங்கு அதிகம் – மேலும் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது ஒரு நல்ல உத்தி அல்ல என மருத்துவ விஞ்ஞானிகள் புதிய எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள்.
கொரோனா நோயாளிகளை வீட்டில் தங்கி இருக்க சொல்வது மிக ஆபத்தான விடையம் என்றும் இது இருமல் அல்லது தும்மலிலிருந்து வேறுபடுகிறது என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
உலக சுகாதார நிறுவனம் இதுவரை ஆபத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது.