கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளது.குறித்த சம்பவத்தில் கார் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று திங்கட்கிழமை இரவு , மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய வன்முறை கும்பல் வீட்டினுள் புகுந்து , யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது.பின்னர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியத்துடன் , காருக்கும் தீ வைத்துள்ளனர். அத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்துள்ளனர்.இச்சம்பவத்தில் காருக்கு வைக்கப்பட்ட தீ பெரியளவில் பரவாத நிலையில்,  கார் சேதமடைந்துள்ளத்துடன் மோட்டார் சைக்கிள் இரண்டும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com