பதுளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

‘பிறபுத்த’ கலாச்சார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த ‘பதுலு புத்தக வசந்தம்’ பதுளை புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று பதுளை சேனநாயக்க பூங்காவில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையியல் இடம்பெற்றது.

குறித்த புத்தகக் கண்காட்சி நேற்று (திங்கட்கிழமை) முதல் 30 ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பதுளை சேனநாயக்க பூங்காவில் நடைபெறும் என ஏற்பாட்டளாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னணி புத்தக வெளியீட்டாளர்களின் பங்கேற்றளுடன் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை புத்தகங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு 20% விசேட தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் பதுளை நகர மேயர் டபிள்யூ.டி. பிரியந்த அமரசிறி உள்ளிட்ட அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com