மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தேசிய மக்கள் சக்தி

நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு, மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பண்டாரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய  அவர், நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கு நாட்டு மக்கள் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார்.

சரியான மக்கள் மற்றும் சரியான அரசாங்கத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்வதே முன்னேற்றத்திற்கான ஒரே மாற்று என்று சுட்டிக்காட்டிய அவர், மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதன்படி அவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கட்சியில் யார் உரிய அமைச்சுப் பதவிகளை வகிக்கப்போகிறார்கள் என்பதில் பலருக்குப் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எவராலும் தமது உரிய பணிகளைச் செய்ய முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.