கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், சரக்கு இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.